Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேர்வில் வெற்றி பெற சிறப்பு வழிபாடு! கருப்பணசுவாமி கோயில் பாரிவேட்டை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் கோவில்களில் நாளை சிவராத்திரி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2015
12:02

உடுமலை : உடுமலை, மடத்துக்குளம் மற்றும் மறையூர் பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில், நாளை மகா சிவராத்திரி விழா, கொண்டாடப்படுகிறது. உடுமலை திருமூர்த்திமலை, அமணலிங்கேஸ்வரர் கோவிலில், மகாசிவராத்திரி விழா, இன்று துவங்குகிறது. இன்றிரவு, 8:00 மணிக்கு, பூலாங்கிணர் கிராமத்தில், திருச்சப்பர பூஜை நடக்கிறது. நாளை மாலை, 4:00 மணிக்கு, பூலாங்கிணர் கிராமத்திலிருந்து திருச்சப்பரம் அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது. இரவு, 8:00 மணிக்கு கோவிலில், புண்யாகவாசனம், முதற்கால பூஜை, அபிேஷகம், தீபாராதனை நடக்கின்றன. இரவு, 10:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜை, அபிேஷகம், தீபாராதனையும், நள்ளிரவு, 2:00 மணிக்கு, மூன்றாம் கால பூஜையும், நாளை மறுநாள் (பிப்., 18) அதிகாலை, 4:00 மணிக்கு நான்காம் கால பூஜையும், 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், சோடச உபசார தீபாராதனையும் நடக்கின்றன.

மகா சிவராத்திரி விழாவையொட்டி, கோவில் வளாகத்தில் நாளை மாலை, 5:00 மணி முதல் நாளை மறுநாள் அதிகாலை வரை, கலை, நாட்டியம், நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. உடுமலை, பொள்ளாச்சியில் இருந்து, திருமூர்த்திமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மடத்துக்குளம், கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோவிலில், நாளை மாலை, 6:00 மணி முதல் நள்ளிரவு, 2:00 மணி வரை, பஞ்சகவ்ய அபிேஷகம், பஞ்சாமிர்த அபிேஷகம், சிவலிங்கம் தோன்றிய காலம், ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்களுக்கு பஞ்சமுக வில்வார்ச்சனை, பஞ்சமுக தீபாராதனை நடக்கிறது; இரவு, 9:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நாளை மறுநாள் அதிகாலை, 3:00 மணி முதல் காலை, 6:00 மணி வரை, கரும்புச்சாறு அபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

மறையூர், கோவில்கடவில் உள்ள தென்காசிநாதன் கோவிலில், சிவராத்திரி விழா, நாளை, காலை 5:00 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சியுடன் துவங்குகிறது. காலை, 6:00 மணிக்கு, திருநடையில் பறை எடுத்தலும், 6:30 மணிக்கு, இளநீர், பால், பன்னீர் அபிேஷகமும், 9:00 மணிக்கு, அன்னதானமும் நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு, திருவாபரண ஊர்வலமும், மதியம், 12:00 மணிக்கு, உச்சிகால பூஜையும், மாலை, 6:00 மணிக்கு, தாலப்பொலி ஊர்வலமும், 6:30 மணிக்கு, தீபாராதனையும், இரவு, 7:30 மணிக்கு, ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது. உடுமலை பூளவாடியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், நாளை காலை, 10:30 மணிக்கு, கணபதி ேஹாமமும், இரவு, 10:00 மணிக்கு அம்மன் அழைப்பும், நள்ளிரவு, 12:00 மணிக்கு, அபிேஷக ஆராதனையும், நாளை மறுநாள் அதிகாலை, 5:00 மணிக்கு, விசேஷ அலங்காரமும் நடக்கிறது.

உடுமலை கொங்கல் நகரத்தில் உள்ள கானியப்ப மசராயர் கோவிலில், சிவராத்திரி முன்னிட்டு, சிறப்பு பூஜை நடக்கிறது. நாளை இரவு முழுவதும் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சி நடக்கிறது. 18ம் தேதி அதிகாலை கிருஷ்ணர் கோவிலில் இருந்து, உற்சவ மூர்த்திகள் தங்கள் வாகனங்களில் எழுந்தருளி கானியப்ப மசராயர் கோவிலுக்கு வீதியுலா வருகின்றனர். இதேபோல், உடுமலை, குறிச்சிக்கோட்டை சிவலிங்கேஸ்வரர் சன்னதி, உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில், புவன கணபதி கோவில், ருத்ரப்பா நகர் பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவில், ஏரிப்பாளையம் சித்தாண்டீஸ்வரர் கோவில், கொழுமம் காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் தாண்டேஸ்வரர் கோவில்களிலும், மகா சிவராத்திரி விழா, கொண்டாடப்படுகிறது; விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், கார்த்திகை மாதம் திங்கட்கிழமைதோறும் சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு, மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருளி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar