பதிவு செய்த நாள்
20
ஜூன்
2011
10:06
நிலக்கோட்டை : நிலக்கோட்டையில் தக்ஷணமாறநாடார் சங்க கருப்புகட்டிபேட்டை கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதிஹோமத்துடன் துவங்கிய, வாஸ்து பூஜை, வாஸ்து சாந்தி, பூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து இரண்டு, மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. ஹோமங்கள், யந்தர, ரத்ன, சிலை பிரதிஷ்டைகள் நடந்தது. நேற்று அதிகாலை விசேஷ ஹோமங்களுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. 7.05க்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. தக்ஷணமாறநாடார் சங்க மாநில நிர்வாகிகள், விழா கமிட்டியாளர்கள், மு.வ. மாணிக்கம் அன் கோ உரிமையாளர் ஜெயச்சந்திரன், இளஞ்சி தங்கமாளிகை உரிமையாளர் செந்தில்வேல், தி.மு.க.,நகர செயலாளர் கருணாநிதி, சிவசக்தி தங்கமாளிகை உரிமையாளர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.