பதிவு செய்த நாள்
18
பிப்
2015
02:02
திருத்தணி: திருத்தணி, பழைய பஜார் தெருவில் உள்ள, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று இரவு, மயான கொள்ளை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவை ஒட்டி, காலை 10:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும்
தீபாராதனை நடந்தது. மதியம் 1:00 மணிக்கு, சிவராத்திரி கரகம் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவந்தது. இரவு 8:00 மணிக்கு, கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 11:00 மணி முதல், அதிகாலை வரை, பக்தி பாடல்கள் மற்றும் பஜனை குழுவினரின் இன்னிசை கச்சேரி நடந்தது. இன்று, பகல் 1:00 மணிக்கு, சிம்ம வாகனத்தில் உற்சவர் அம்மன் வீதியுலா மற்றும் மயான கொள்ளை நிகழ்ச்சி நடக்கிறது.தொடர்ந்து, வரும் 28ம் தேதி வரை, இரவு 7:30 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.