பதிவு செய்த நாள்
18
பிப்
2015
02:02
புதுச்சேரி: புதுச்சேரி பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் சார்பில், 79வது திரிமூர்த்தி
சிவஜெயந்தி விழா நேற்று நடந்தது.
வள்ளலார் சாலை பாலாஜி நகரில் உள்ள ராஜயோக தியான மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், சங்கரன் வரவேற்றார். தண்டாயுதம், குகன், ராமதாஸ் முன்னிலை வகித்தனர். வெங்கடேசன், வித்தியாலயம் குறித்து பேசினார். புதுச்சேரி கிளை பொறுப்பாளர் கவிதா, சிவராத்திரியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவில் ஸ்தாபகர் சிதம்பர கீதாராம் குருக்கள், விழா கொடியேற்றி, சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிகளை அனந்தகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
மணிகண்டன் நன்றி கூறினார். தொடர்ந்து, மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை
சிவராத்திரி குறித்த ஆன்மிக விளக்க கண்காட்சி நடந்தது. காலாப்பட்டு பாலமுருகன் கோவிலில், சோமநாத் லிங்க தரிசன துவங்கி, இன்று வரை நடக்கிறது. மேலும், காளத்தீஸ்வரர் கோவில், சித்தானந்த சுவாமி கோவில், வில்லியனுார் திருக்காமீசுவரர், உழவர்கரை சுந்தரேஸ்வரர், பாகூர் மூலநாதர், திருவாண்டார்கோவில் பஞ்சநாதீஸ்வரர், வி.மணவெளி திரிவேணி ஈஸ்வரர் ஆகிய சிவன் கோவில்களில், ஆன்மிக விளக்க படக்கண்காட்சி நடக்கிறது. ஏற்பாடுகளை இயக்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.