பதிவு செய்த நாள்
20
ஜூன்
2011
10:06
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம் ஜூலை 10ல் நடக்கிறது. ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பாண்டியமன்னர் காலத்தில் கட்டப்பட்டது. தற்போது ரூபாய் 41 லட்சம் செலவில் ஏழு நிலை ராஜகோபுரம் கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. ஜூலை 10ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கோபுரத்தில் தற்போது வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகிறது. நடராஜர் சிவகாமி அம்மன் சந்நிதி, பள்ளியறை, பிரதோஷ மண்டபம், மடப்பள்ளி, தட்சணாமூர்த்தி சந்நிதி, துர்க்கை அம்மன் சந்நிதி, நவக்கிரக மற்றும் பைரவர் சந்நிதி, வாகனங்கள் பாதுகாப்பு மண்டபம், மண்டபங்களில் கிரானைட் கல் பதித்தல் உட்பட்ட பணிகள் நடக்கிறது. கும்பாபிஷேக பணிகள் திருப்பணி கமிட்டி தலைவர் தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ., தலைமையில் கமிட்டி உறுப்பினர்கள் வச்சிரவேல், முனிராஜ், தண்டாயுதபாணி, ராமநாதன், சுப்புராம், நிர்வாக அதிகாரி ரம்யசுபாஷினி ஆகியோர் விழா ஏற்பாட்டினை செய்து வருகின்றனர்.