விழுப்புரம்: விழுப்புரம் ரேணுகா அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா நடந்தது. விழுப்புரம் கே.கே.,ரோடு பகுதியில் அமைந்துள்ள ரேணுகா அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா நடந்தது. நேற்று மதியம் 2:00 மணிய ளவில் ருத்ர பூமியில் மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது. தொடர்ந்து இரவு 7 மணியளவில் பூத வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. இன்று மாலை அம்மனுக்கு மஞ்சள் நீர் விழாவும், புஷ்ப அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை மதியம் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.