சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை மகா ருத்ர ஹோமம், மாலை முதற்கால ருத்ராபிஷேகம், அலங்காரம் நடந்தது. இரண்டாம் காலம், மூன்றாம் காலம், நான்காம் கால அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பிரதோஷ வழிபாட்டுமன்ற தலைவர் நாட்டார் ராமலிங்கம், வணிகர் பேரவை மாவட்ட பொரு ளாளர் முத்து கருப்பன், வள்ளலார் மன்ற துணை தலைவர் வைத்திலிங்கம் செட்டியார் உட்பட பலர் கலந்து கொண்டனர். சங்கராபுரம் வட்டம் பாக்கம், கடுவனுõர், மூக்கனுõர், மஞ்சபுத்துõர் சிவன் கோவில்களில் சிவராத்திரி விழா விமரிசையாக நடந்தது.