விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தொரவி பெரியநாயகி உடனுறை கைலாச நாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி நந்தீஸ்வரர் மற்றும் கைலாச நாதருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்து நான்கு கால பூஜைகள் நடந்தன. பூஜைகளை புதுச்சேரி சிவநேய செல்வர் சரவணன் , சிவ ராஜா செய்தனர் .ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி சங்கர் மற்றும் பக்தர்கள் தரிசனம் செய்தனர் .