திருக்கோவிலூர்: திருக்கோவிலூரை அடுத்த பரனூர் சத்திரம் திரவுபதியம்மன் கோவில் தேர், தீமிதி விழா நேற்று நடந்தது. திருக்கோவிலூரை அடுத்த பரனூர் சத்திரம் திரவுபதியம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேர், தீமிதி விழா நடந்தது. நேற்று முன்தினம் மாலை பரனூர் குளக் கரையில் சக்தி கரகம் அலங்கரிக்கப் பட்டு, கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. திரவுபதியம்மன் சமேத அர்ச்சுணன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சுற்று வட்டாரத்தை சேர்ந்த 7 ஊர்களில் வீதியுலா நடந்தது. மாலை 4:00 மணிக்கு சுவாமி கோவிலை அடைந்தவுடன், தென்பெண்ணை ஆற்றில் தீர்தவாரி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்கள் வடம்பிடித்தனர்.