பதிவு செய்த நாள்
19
பிப்
2015
12:02
சென்னை: தியாக பிரம்ம கான சபா சார்பில், தியாகராஜ ஆராதனை விழா - 2015 நடைபெற்று வருகிறது. தி.நகர், ஜி.என்., செட்டி சாலையில் உள்ள வாணிமகால் அரங்கில், ஸ்ரீதியாக பிரம்ம கான சபா சார்பில், தியாகராஜ ஆராதனை விழா நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த விழாவில், சிறந்த கலைஞர்களுக்கு ரொக்க பரிசுடன் நினைவு பரிசும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விழா கடந்த, 13ம் தேதி துவங்கியது. விழாவில், இந்த ஆண்டிற்கான சிறந்த கலைஞருக்கான தியாக பிரம்ம நாத விபூஷண் விருது, வாய்ப்பாட்டு கலைஞர் பி.எஸ்., நாராயணசாமிக்கு வழங்கப்பட்டது. விருதுடன், 1.50 லட்சம் ரூபாய் காசோலை மற்றும் நினைவு பரிசை, சென்னை பல்கலைக்கழக இசை பேராசிரியர் துர்கா வழங்கி கவுரவித்தார். கடந்த மூன்று நாட்களாக, இந்த விழாவில், இசை கச்சேரிகள் நடந்தன. ஈரோடு பாலாஜி பாகவதர், தியாகராஜ ராமாயணம் என்ற தலைப்பில், சங்கீத சொற்பொழிவு நடத்துகிறார். விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.