புதுடில்லி : அமர்நாத் யாத்திரை குறித்த விழிப்புணர்வு பிரசாரத்திற்காக அமர்நாத் யாத்திரை குறித்த குறும் படங்களை நாடு முழுவதும் அனைத்து டிவி சேனல்களிலும் ஒளிபரப்ப தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. 23 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படங்களில் அமர்நாத் யாத்திரையின் போது எதிர்கொள்ள வேண்டிய சவால்கள், அங்குள்ள குகைகள், தட்பவெப்ப நிலை உள்ளிட்டவைகள் குறித்து விளக்கப்பட உள்ளது.