பதிவு செய்த நாள்
21
பிப்
2015
11:02
விருத்தாசலம்: விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கடலுõர் மாவட்டம், விருத்தாசலம் சந் தைத்தோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மகா சிவராத்திரி ரணகளிப்பு உற்சவம், கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் சித்தி விநாயகர், புத்து மாரியம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. நேற்று முன்தினம் (18ம் தேதி) மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நேற்று இரவு (19ம் தேதி) அங்காள பரமேஸ்வரி, தாண்டவராய சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி, சிறப்பு அபிஷேக ஆராதனை, சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி, இரவு 8:00 மணிக்கு மேல் திருக்கல்ய õணம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். நாளை (21ம் தேதி) தேரோட்டம், 22ம் தேதி மணிமுக்தாற்றிலிருந்து பால்குடம், கரகம், தீச்சட்டி ஏந்தி வருதல், மஞ்சள் நீர் உற்சவம், இரவு பாரத மாதா அலங்காரத்தில் சுவாமி வீதியுலா, 23ம் தேதி திருவிளக்கு பூஜையுடன் நிறைவு பெறுகிறது.