பதிவு செய்த நாள்
21
பிப்
2015
11:02
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக தேரோட்டத்தை முன்னிட்டு, 5 தேர்களையும் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரு த்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவம் வரும் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதில், 6ம் நாள் உற்சவமாக விருத்தகிரீஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் விபசித்து முனிவருக்கு காட்சியளித்தல், மார்ச் 3ம் தேதி தேரோட்டம், 4ம் தேதி மாசிமகம், 5ம் தேதி தெப்பல் உற்சவம் நடக்கிறது. தேரோட்டத்தன்று விநாயகர், முருகன், விருத்தகிரீஸ்வரர், தாயார், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் அலங்கரித்த 5 தேர்களில் வீதியுலா வந்து அருள்பாலிப்பது வழக்கம். அதில், 5 தேர்களிலும் சட்டங்கள், அலங்கார சீலைகள் சேதமடைந்தன. அதைத் தொடர்ந்து, 4 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக தேர் சட்டங்கள் பொருத்தும் பணி துவங்கியது. @மலும் 7 லட்சம் ரூபாயில் தேர் சீலைகளும் பொருத்தப்பட உள்ளன.