பதிவு செய்த நாள்
23
பிப்
2015
11:02
போளிவாக்கம்: போளிவாக்கத்திலுள்ள வேணுகோபால சுவாமி கோவிலில், நேற்று, மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது. மணவாள நகர் அடுத்துள்ளது போளிவாக்கம் ஊராட்சி. இங்குள்ள பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில், மகா சம்ப்ரோக்ஷணம் நேற்று நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம், காலை 8:30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையும், கணபதி, நவக்கிரக ஹோமமும், மகா தீபாராதனையும், அதை தொடர்ந்து 10:30 மணிக்கு நுாதன பிம்பங்கள் வீதியுலாவும் நடந்தது. பின், நேற்று காலை 8:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜையும், 9:30 மணிக்கு கோவில் ÷ மற்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள வேணுகோபால சுவாமிக்கு, மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது. அதை தொடர்ந்து கோவில் உட்புறம் அமைந்துள்ள மூலவருக்கும், வலம்புரி விநாயகருக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள நவகிரக மூர்த்திகளுக்கும் புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், காலை 10:00 மணிக்கு, பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமிக்கு மகா தீபாராதனையும் நடந்தது.