விட்டல் ருக்மிணி கோயிலில் மார்ச் 2 முதல் தொடர்ந்து 101 நாட்கள் ஹோமம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23பிப் 2015 11:02
கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தானில் உலக நலன் வேண்டி தொடர்ச்சியாக 101 நாட்கள் நடைபெற உள்ள ஒரு கோடி புருஷஸூக்த ஹோமம் பூர்வாங்க பூஜைகள் மகாசிவராத்திரியான கடந்த 17ம் தேதி பாண்டுரங்கன் சன்னதியில் தொடங்கி யது. கோவிந்தபுரத்தில் தட்சிண பண்டரிபுரமாக போற்றப்படும் சுமார் 150 அடி உயர பிரமாண்டமான ருக்மிணி சமேத பாண் டுரங்கன் கோயில் உள்ளது.இங்கு பெரிய அளவிலான கோசாலையில் தெய்வ பசுக்கள் 500க்கும் மேற்பட்டவை வளர்க்கப்ப டுகிறது.
இக்கோயிலில் வரும் மார்ச் 2ம் தேதி முதல் ஜூன் 10ம் தேதி வரை தொடர்ந்து 101 நாட்கள் ஒரு கோடி புருஷஸூக்த ஹோமம் நடக்கிறது. புத்ர பாக்யம் வேண்டுபவர்களுக்கு நம்முடைய முன்னோர்களான ரிஷிகள் சொன்ன முக்கிய பரிகாரம் புருஷஸூ க்த ஹோமம். புத்ர பாக்யம் வேண்டுபவர்கள் ஒரு நாள் ஹோமத்தை சங்கல்பம் செய்து கொண்டு நடத்தினால் பகவானின் கிருபையால் புத்ர பாக்யம் ஏற்படும். விவாஹ ப்ராப்தியும், குடும்ப சேமமும் ஏற்படும். இந்த பாக்யத்தை அனைவரும் அடையும் வகையில் ஹோமத்தினை தரிசனம் செய்து பயனடைய உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஹோமம் 2ம் தேதி முதல் காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணி வரை 40க்கும் மேற்பட்ட வேத வித்துக்கள் மூலம் தொடர்ந்து 101 நாட்கள் நடத்தப்படுகிறது. இதற்காக தனியாக கோயில் எதிரே மிகப் பெரிய அளவில் ஹோமம் மண்டபம் அமைக்கப்படுகிறது.
இதற்கான பூர்வாங்க பூஜைகள் நடந்தது. இதில் 108 கடங் கள் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து தினகர் சர்மா தலைமையில் 20 வேத விற்பன்னர்களுடன் சிறப்பு ஹோமம் நடந்தது. சுமார் 6 மணி நேரம் நடந்த இந்த பூஜை மற்றும் ஹோமத்தில் சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ ராமதீட்சதர், கோயில் ஸ்தாபகர் பூஜ்யஸ்ரீ விட்டல்தாஸ் மகராஜ் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். உலக நலன் வேண்டி நடைபெறும் இந்த ஒரு கோடி புருஷஸூ க்த ஹோமத்தில் பங்கேற்க விரும்புவோர் 0435 .. 2472300, 93451 54953, 94433 95387 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.