நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அங்காளம்மன் கோவிலில் 141ம் ஆண்டு மயானகொள்ளை உற்சவத்தையொட்டி மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு அங்காளம்மன் கோவில் மயானகொள்ளை திருவிழாவை முன்னிட்டு கடந்த 16 ம் தேதி இரவு 8:00 மணிக்கு சுவாமி வீதியுலாவும், 17ம் தேதி மாலை 6:00 மணிக்கு அம்மன் குறத்தி வேடம் அணிந்து குறி சொல்லுதல், வள்ளாலகண்டன் கோட்டை கட்டும் ஐதீகம், சுவாமி வீதியுலா நடந்தது. 18ம் தேதி மாலை 3:00 மணிக்கு மயானகொள்ளை உற்சவமும், 6:00 மணிக்கு தேரில் அங்காளம்மன் வீதியுலா நடைபெற்றது. 19ம் தேதி காலை 8:00 மணிக்கு சாகை வார்த்தலும், இரவு 8:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. அதனையொட்டி அ ங்காளம்மன் பழங்களினால் சிறப்பு அலங்காரம் செய்து வீதியுலா நடைபெற்றது.