பனைக்குளம் : பனைக்குளம் அருகே அத்தியூத்து கிராமத்தில் உள்ள உதிரமுடைய அய்யனார், பகவதி அம்மன் கோயிலில் பாரிவேட்டை திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு கரகம், தீச்சட்டி, அக்கினி காவடி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று அதிகாலை மூலவர்கள் மற்றும் பரிவார சுவாமிகள் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பெண்கள் பொங்கலிட்டனர். கருப்பணசுவாமிக்கு ஆடு, கோழி படையலிட்டு வழிபாடு செய்யப்பட்டது. ஏற்பாடுகளை தலைவர் தர்மராஜ் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.