Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்களில் கற்பூர ஆரத்திக்கு தடை: ... விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்! விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊட்டி பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2015
12:03

ஊட்டி : பொக்காபுரம் மாரியம்மன் கோவில் விழா, உற்சாகமாக நடந்தது.

Default Image

Next News

ஊட்டி மசினகுடி அருகே, அடர்ந்த வனப்பகுதியில், அமைந்துள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில், ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டைய விழா, கடந்த, 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, அம்மனுக்கு தினமும் காலை முதல் மாலை வரை, சிறப்பு அபிஷேகம், பூஜைகள், திருவிளக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஊட்டி, கூடலூர், மசினகுடி, மாவனல்லா உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து கரகம், முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக பொக்காபுரம் கோவிலை வந்தடைனர்.

விடிய, விடிய கொண்டாட்டம் :
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த் திருவிழா, நேற்று முன்தினம் நடந்தது; இரவு, 10:00 மணிக்கு, மாவட்ட கலெக்டர் சங்கர், தேரை வடம் பிடித்து இழுத்து, துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரபாண்டியன் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். விழாவை காண, மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும், பக்தர்கள், பொதுமக்கள் வந்தனர். இரவு முழுக்க பஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டது. கோவில் வளாகத்தை சுற்றி, ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள், உணவுக் கூடங்கள், விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்ததால், மக்கள், குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டு இருந்தது. சாலையில், வாகனங்கள் அணி வகுத்து வந்தால், அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டது.

அன்னதானம் அமர்க்களம் : மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் நடக்கும் தேர் திருவிழாவை முன்னிட்டு, ஊட்டி நீலாம்பிகை சேவா சங்கத்தின் சார்பில், பக்தர்களுக்கு, நான்கு நாட்கள் அன்னதானம் வழங்கப்பட்டது. கடந்த பிப்., 28ம் தேதி முதல், 3ம் தேதி மதியம் வரை கரகம் ஏந்தி வரும் பக்தர்களுக்கும், விழாவை காண வரும் பக்தர்களுக்கும், காலை, 7:00 மணி முதல், 10:00 மணி வரையும், மாலை, 5:00 மணி முதல், இரவு, 12:00 மணி வரையும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல, ஆணைகட்டி ஆனிக்கல் அம்மன் கோவிலில் நடந்த குண்டம் விழாவில், திரளான பக்தர்கள் தீ மிதித்து, தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர். இதில், படுகரின கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்று வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தெற்கு ரத வீதியில் ரூ. 14 லட்சம் செலவில் நிழல் தரும் பந்தல் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar