பதிவு செய்த நாள்
04
மார்
2015
02:03
அரூர் : அரூர் அடுத்த, தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் மாசி மக தேரோட்டம், இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
சிறப்பு வாய்ந்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில், மாசி மகத்தேரோட்டம் இன்று (மார்ச், 4) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 5ம் தேதி ஸ்வாமி தேர் திருவீதி உலாவும், 6ம் தேதி குத்து விளக்கு பூஜையும், 8ம் தேதி கல்யாண உற்சவமும், 9ம் தேதி ரிஷப வாகன திருவீதி உலாவும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும், 10ம் தேதி நடக்கிறது. தேரோட்டத்தை காண, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவு வருவர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது.