பதிவு செய்த நாள்
05
மார்
2015
12:03
ஈரோடு: ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோவிலுக்கு உட்பட்டு, பெரிய மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன், சின்ன மாரியம்மன் என, மூன்று கோவில்கள் உள்ளன. ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம், தேர் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு வரும், 17ம் தேதி பூச்சாட்டுதலுடன் நிகழ்ச்சி துவங்குகிறது.வரும், 21ம் தேதி கம்பம் நடும் விழா, 25ம் தேதி கிராம சாந்தி, 26ம் தேதி கொடியேற்றுதல் நடக்கிறது. 31ம் தேதி காலை, 5.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் பூ மிதித்தல், இரவு மாவிளக்கு நடக்கிறது. ஏப்., 1ம் தேதி பொங்கல் விழா, சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து தேர் வடம் பிடித்தலும், 2ம் தேதி மாலை, நான்கு மணிக்கு பெரிய மாரியம்மன் மலர் பல்லக்கில் வீதி உலா செல்லுதல் நடக்கிறது.ஏப்., 3ம் தேதி காரை வாய்க்கால் மாரியம்மன் மலர் பல்லக்கில் வீதி உலா, வரும்,4ம் தேதி கம்பங்களை எடுத்து மஞ்சள் நீர் விழாவுடன், வழக்கப்படி காரை வாய்க்காலில் விடப்பட உள்ளது. வரும், 5ம் தேதி காலை 10.30 மணிக்கு மறுபூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜா செய்து வருகிறார். கோவில் முன்புறம் பந்தல் அமைக்கும் பணிக்கான பூஜை, நேற்று நடந்தது. இன்று முதல் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெறும். வரும், 10ம் தேதி திருவிழா காலத்தில் கடைகள் அமைத்து கொள்வதற்கான ஏலம் நடக்கிறது. 43 கடைகள் அமைக்க, கோவில் நிர்வாகம் இம்முறை திட்டமிட்டுள்ளது.