மேலுார் : மேலுார் அருகே அம்பலகாரன்பட்டி வல்லடிகாரர் சுவாமி கோயில் திருவிழா நேற்று துவங்கியது. மாலையில் பூரணி மற்றும் பொற்கலை அம்பாளுடன் திருக்கல்யாணம் நடந்தது. இன்று மதியம் கிடா வெட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. கிடா வெட்டியதை பொதுமக்கள் அறிய பட்டாசு வெடிக்கப்படும். வெள்ளலுார், உறங்கான்பட்டி, குறிச்சிப்பட்டி, கோட்டநத்தாம்பட்டி, அம்பலகாரன்பட்டி பிரிவுகளுக்குட்பட்ட 60 கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்படும். மாலை வெள்ளி ரதத்தில் சுவாமிகள் உலாவும், நாளை தேரோட்டமும், பின் மஞ்சள் நீராட்டுடனும் திருவிழா நிறைவு பெறும்.