ஸ்ரீவி மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா: மார்ச் 9ல் கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2015 01:03
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம்மன் கோயில் பூக்குழி விழா மார்ச் 9 காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி அன்று அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு அம்பாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருள வீதியுலா நடக்கிறது. விழாவின் போது அம்பாள் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார். 12ம் நாளன மார்ச் 20 பகல் 1.35 மணிக்கு பூக்குழி,13ம்நாள் மதியம் 12.15 மணிக்கு அம்பாள் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ராமராஜா, நிர்வாக அதிகாரி லதா செய்துள்ளனர்.