விருத்தாசலம்: மாசி மாத பவுர்ணமியையொட்டி, ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு ராஜ அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.