நாகப்பட்டினம்: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு,நாகை தனியார் கல்லூரியில் 1008 குத்துவிளக்கு பூஜை நடந்தது. நாகை,இ.ஜி.எஸ்.,பிள்ளை கல்வி குழுமம் சார்பில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு,உலக நன்மை,இயற்கை இடர்பாடுகளில் இருந்து மக்களை காப்பாற்றவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவும், மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வு மேம்படவும் வேண்டி,நேற்று கல்லூரி வளாகத்தில் 1008 குத்துவிளக்கு பூஜை நடந்தது. கல்லூரி செயலாளர் பரமேஸ்வரன் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். சிவாச்சாரியார்கள் சிவாத்மஜன், ஆனந்த கணேச சிவம் ஆகியோர்,ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் திருவுருங்களை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லு õரி மாணவிகள் கலந்து கொண்டனர்.