பழநி:பழநி மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பழநி வ.உ.சி., மன்றம் மற்றும் கொங்கு வேளாளர் சங்கம் சார்பில், பாண்டிய வேளாளர் மடத்திலிருந்து 2500 பால்குடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு நகரின்முக்கிய வீதிகள் வழியாக சென்று மாரியம்மன்கோயிலை அடைந்தது. உச்சிக்காலத்தில் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது.
மாலையில் அம்மனுக்கு அன்னத்தால் செய்யப்பட்ட அன்னபூரணி அலங்காரத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சித்தனாதன் அன் சன்ஸ் சிவனேசன், சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர். 64 ஸ்தானீக மிராஸ் பண்டாரங்கள் சார்பில் உற்சவசாந்தி விழா நடந்தது. சண்முகநதியிலிருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்து, அன்னதானம் வழங்கினர்.