லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கருட சேவை நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2015 11:03
விழுப்புரம்: பவுர்ணமியை யொட்டி சிறுவந்தாடு லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கருடசேவை விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 5ம் தேதி காலை 11:00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கு, ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மூலவர் புஷ்பம், துளசியால் அலங்கரிக்கபட்டு கனகவல்லி தாயாரோடு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு கருட சேவை நடந்தது. ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.