பதிவு செய்த நாள்
12
மார்
2015
11:03
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் நடக்கும் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந் தது. திருக்கல்யாண வைபவத்தை ஒட்டி, அதிகாலை, 6:00 மணி முதலே பெண்கள் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து வர தொடங்கினர். காலை, 9:00 மணியளவில் ஊர் மணியக்காரர் இல்லத்திலிருந்து அம்மனுக்கு மாங்கல்யசீர் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, தேவஸ்தானம் சார்பில், தங்க கிரீடம், சூலாயுதம், பட்டுப்புடவை ஆகியவை வழங்கப்பட்டன. அடுத்ததாக, 10:00 மணிக்கு பொள்ளாச்சி நகை தொழிலாளர்கள் சார்பில், அம்மனுக்கு நகைகள் வழங்கப்பட்டன. மேலும், தையற்கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் அம்மனுக்கு ஆடைகள் ஊர்வலமாக கொண்டு
வரப்பட்டு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, 10:30 மணியளவில் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் துவங்கின. சிறப்பு ஹாமங்களுக்குப்பின், 11:30 மணிக்கு மாங்கல்ய தானம் செய் யப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த பொதுமக்கள், அம்மன் திருக்கல்யாண நிகழ்வை கண்டு களித்தனர். இதன்பின், 12:30 மணியளவில், அம்மன் மற்றும் விநாயகர் வெள்ளித்தேரில் எழுந்தருளினர். இந்நிகழ்ச்சியில் கோவிலின் பரம்பரை அறங்காவலர் குடும்பத்தார், செயல் அலுவலர் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.