கொடுங்கோல் அரசன் ஒருவன் துறவியிடம் போனான். அவரிடம் சுவாமி! பிரார்த்தனைகளில் சிறந்தது எது? என்று கேட்டான். துறவி சொன்னார். உங்களைப் பொருத்தவரை உறக்கம் தான்! அரசன் விழித்தான். துறவி விளக்கினார். நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போதாவது மக்கள் துன்புறுத்தப்படாமல் இருக்கிறார்கள் அல்லவா ? அதனால் தான்! அரசன் தன் தவறு உணர்ந்து திருந்தினான்.