திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் திருவள்ளுவரின் பெருமையை நன்கு உணர்ந்து அவரை தேவர் என்றே அழைக்கிறார். அருணகிரிநாதர் தம்முடைய திருச்செந்தூர் திருப்புகழில் திருவள்ளுவ தேவர் வாய்மை என்கிற பழமொழியை ஓதியே உணர்ந்து என்று பாடி இருக்கிறார். திருக்குறளைப் படித்தால் மட்டும் போதாது; ஓதி உணர வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.