திருவாடானை : திருவாடானை அருகே ஓரியூர் புனித அருளானந்தர் கோயிலில் அருளானந்தர் புனிதர் பட்டம் பெற்ற 64ம் ஆண்டு நினைவு விழா நடந்தது. நேற்று முன்தினம் நடந்த இவ்விழா கூட்டு திருப்பலி தலைமை ஆசிரியர் வில்சன் தலைமையில் நடந்தது. அன்று இரவு தேர்பவனி நடந்தது. சிவகங்கை மறைமாவட்ட முதன்மை குரு ஜோசப், பாதிரியார்கள் சேவியர்ராஜ், டார்வின் எஸ்.மைக்கிள், நற்கருணை ஆலோசகர் நெடுங்காட் மற்றும் பலர் பங்கேற்றனர். புனித அருளானந்தர் அமர்ந்த தேர் முக்கிய வீதி வழியாக சென்றது. திருவாடானை அருகே பருத்தியூரில் உள்ள அந்தோணியார் கோயில் தேர்பவனி நடந்தது. பாதிரியார் ஜெரால்டுஜோசப் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. ஆண்டாவூரணி அருகே அறுநூற்றிவயல் அந்தோணியார் கோயில் தேர்பவனி நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.