பதிவு செய்த நாள்
16
மார்
2015
12:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம், வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காஞ்சிபுரத்தில் புகழ்பெற்று விளங்கும், ஏலவார்குழலி உடனுறை ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும்.இந்த ஆண்டுக்கான உற்சவம், வரும் 24ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கி, 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில், ஐந்தாம் நாள், வெள்ளித்தேர்; ஏழாம் நாள், திருத்தேர்; ஒன்பதாம் நாள், வெள்ளி மாவடி சேவை; ௧௦ம் நாள் அதிகாலை, திருக்கல்யாணம் ஆகியவை நடைபெற உள்ளன.