தேனி : சுருளி அருவி அருகே அண்ணாமலையார் கோயிலில் மாசி கடைசி வெள்ளியை முன்னட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி அன்று பகல் 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. மறுநாள் சிறப்பு திருமஞ்சனம்,யாக பூஜைகளும் நடந்தது. நேற்று காலை பங்குனி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.