புதுச்சேரி: சின்னசுப்ராயபிள்ளை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில், பங்குனி அமாவாசையை முன்னிட்டு, ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது. விழாவையொட்டி, மாலை 5.00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. 7.30 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் விஜயக்குமார் தலைமையில் நிர்வாகிகள், தனி அதிகாரி செய்திருந்தனர்.