அவிநாசி : அவிநாசி கிழக்கு வீதியில் உள்ள அரசமரத்து விநாயகர் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில், 18ம் ஆண்டு பூச்சாட்டு விழா, கடந்த 13ல் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பொங்கல் நாளான நேற்று காலை, பெண்கள் மாவிளக்கு ஊர்வலம் எடுத்து பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். அதன்பின், மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளுக்குபின், கம்பம், கங்கையில் விடும் நிகழ்ச்சி மற்றும் அன்னதானம் நடந்தது. இன்று காலை 10:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு பூஜையுடன் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகிறது.