பதிவு செய்த நாள்
20
மார்
2015
12:03
பொள்ளாச்சி : பொள்ளாச்சி எஸ்.மலையாண்டிபட்டினம் விநாயகர், காளியம்மன், துர்க்கையம்மன் மற்றும் ஐயப்பன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. பொள்ளாச்சி எஸ்.மலையாண்டிபட்டினத்தில் விநாயகர், காளியம்மன், துர்க்கையம்மன் மற்றும் ஐயப்பன் கோவில்கள் அமைந்துள்ளன. கோவில்களுக்கு வரும் 22ம் தேதி கும்பாபிேஷகம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று காலை, வாஸ்து சாந்தி, மகா கணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது. நாளை காலை, 7:00 மணி முதல், துவாரக பூஜை, திக்பால பூஜை, வேதிகா திருவாராதனை நடைபெறும். 10:30 மணிக்கு மகா திருமஞ்சனம், பிம்பசுத்தி, தீர்த்தாபிஷேகம், சயனாதிவாசம் நடைபெறும். மாலை, 4:00 மணிக்கு மேல், அனைத்து கோவில்களிலும் விமான கலசம் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தன மருந்து சாற்றப்படும். 5:00 மணிக்கு மேல், யாக சாலை பூஜைகள், பூர்ணாகுதி நடக்கிறது. அடுத்து, 22ம் தேதி காலை, 4:00 மணிக்கு வேத பாராயணம், நவதுர்க்கா ஹோமம், திரவியாகுதி, பிராண பிரதிஷ்டை, மகாபூர்ணாகுதி, யாத்ரா தானம், நடைபெறும். தொடர்ந்து 6:00 மணிக்கு விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், 6:30 மணிக்கு துர்க்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம், 7:00 மணிக்கு ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. அடுத்து, 7:45 மணிக்கு காளியம்மன், மாரியம்மன், கருப்பராயன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 9:30 மணி முதல் அபிஷேகம், அலங்காரம், கோமாதா பூஜை, தசதரிசனம், அன்னதானம் நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.