திருப்பூர் : கரட்டாங்காடு சித்தி விநாயகர், மாகாளியம்மன் கோவிலில், பொங்கல் விழா, கடந்த 17ல், பூச்சாட்டுடன் துவங்கியது. வரும் 23 இரவு, கொடுமுடி காவிரி தீர்த்தம் கொண்டு வர புறப்படுதல், வரும் 25 காலை, மாவிளக்கு ஊர்வலத்துடன் துவங்கும் விழாவில், பொங்கல் வைத்தல்; மாலை 4:00க்கு, கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து பூவோடு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.