பதிவு செய்த நாள்
20
மார்
2015
12:03
காரிமங்கலம்: காரிமங்கலம் மந்தை வீதி, மகா சக்தி மாரியம்மன் கோவில், 36ம் ஆண்டு, யுகாதி தேர்த்திருவிழா, இன்று துவங்குகிறது.காலை, 10.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் கொடியேற்றம் நடக்கிறது. மாலை அம்மன் திருவீதி உலா நடக்கிறது. நாளை, தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு, காலை, 7.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் அம்மன் ரத ஏற்றம், வடம் பிடித்தல் நடக்கிறது.மார்ச், 22ம் தேதி, காலை, 10.30 மணிக்கு மேல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் கொடியிறக்கம் நடக்கிறது.