பதிவு செய்த நாள்
20
மார்
2015
12:03
திருமழிசை: திருமழிசை ஒத்தாண்டீஸ்வரர் கோவிலில், வரும் 25ம் தேதி, பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. வெள்ளவேடு அடுத்த, திருமழிசையில் உள்ளது குளிர்ந்த நாயகி உடனுறை ஒத்தாண்டீஸ்வரர் கோவில். இந்த கோவிலில், பங்குனி உத்திர திருவிழா, வரும் 24ம் தேதி, விநாயகர் உற்சவத்துடன் துவங்குகிறது. முன்னதாக, வரும் 22ம் தேதி, பாலசம்பந்த விநாயகர் வழிபாடும், கிராம தேவதைகளான எல்லையம்மன், அருவாம்பிகையம்மனுக்கு வாடைப் பொங்கல் நிகழ்ச்சியும் நடைபெறும். அதன்பின், 25ம் தேதி காலை 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் கொடியேற்றமும், மாலை மங்களகிரி உற்சவமும் நடைபெறும். தொடர்ந்து, 12 நாட்கள் திருவிழா நடைபெறும்.
நாள் நேரம் நிகழ்ச்சி
மார்ச் 26 காலை சூரிய விருத்தம்
மாலை சந்திர விருத்தம்
மார்ச் 27 காலை மங்களகிரி உற்சவம்
மாலை சிம்ம வாகனம்
மார்ச் 28 காலை சிவிகை உற்சவம்
மாலை நாக வாகனம்
மார்ச் 29 காலை அதிகார நந்தி சேவை
மாலை ரிஷப வாகனம்
மார்ச் 30 காலை தொட்டி உற்சவம்
மாலை யானை வாகனம்
மார்ச் 31 காலை மகா ரத உற்சவம்
மாலை வசந்த மண்டபம் எழுந்தருளல்
ஏப். 1 மாலை ஊனாங்குடி சேவை இரவு குதிரை வாகனம்
ஏப். 2 காலை சிவிகை உற்சவம் மாலை பிக்ஷாடனர் சவுடல் விமான உற்சவம்
ஏப். 3 காலை நடராஜர் தரிசனம் மாலை திருக்கல்யாணம் இரவு பஞ்சமூர்த்தி உற்சவம்
ஏப். 4 இரவு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளல்
ஏப். 5 காலை உமாமகேஸ்வரர் தரிசனம் இரவு சந்திரசேகரர் எழுந்தருளல்
ஏப். 6 இரவு சுப்ரமணியர் சுவாமி எழுந்தருளல்.