ஸ்ரீவி.,பெரியமாரியம்மன் கோயிலில் புக்குழிவிழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2015 03:03
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம்மன் புக்குழித் திருவிழா கடந்த 9ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 12ம் நாளான நேற்று புக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று இரவே வெளியுர் பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அதிகாலை 4 மணிமுதல் பக்தர்கள் குளித்து, ஈர உடையுடன் திருவண்ணாமலை பெருமாள் கோவில், பட்டத்தரசியம்மன் கோயிலுக்கு தேங்காய் உடைத்து சாமி கும்பிட்டனர். பின்னர் ஆண்டாள் கோயில் ரதவீதிகளை வலம் வந்து பெரியமாரியம்மன் கோயிலில் குவிந்தனர். மதியம் 1.35 மணி முதல் சுமார் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள்,கைக்குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை புக்குழி இறங்கினர்.
அம்பாள் வீதியுலா எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். டாக்டர் ராமநாதன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் மருத்துவப் பணியில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி முரளிதரன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோயில் நிர்வாகஅதிகாரி லதா, தக்கார் இராமராஜா மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் அலுவலர்கள் விழா ஏற்பாடுகளை கவனித்தனர்.தினமலர் சார்பில் விளம்பரமுகவர் அங்குராஜ் தண்ணீர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு மோர்,பாணாக்காரம் வழங்கினார். நகரின் பல்வேறு இடங்களில் பல்வேறு பொதுநல அமைப்புகள் தண்ணீர் பந்தல் அமைத்திருந்தனர். சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.