பதிவு செய்த நாள்
21
மார்
2015
10:03
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.,பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம் பகுதிவாசிகள், மழை பொழிய வேண்டி, நேற்று, வருண பகவானை நோக்கி ஒப்பாரி வைத்து, வினோத வழிபாடு நடத்தினர். அம்மையார்குப்பத்தைச் சேர்ந்த, 100 பெண்கள், நேற்று மாலை, அம்மையார்குப்பம் ஏரியில் கூடினர். வருண பகவான், கிராம தேவதை, பூமித்தாய் உள்ளிட்ட தெய்வங்களின் கற்சிலைகளை அமைத்து, பூஜை நடத்தினர். பூஜையில், மூத்த பெண்கள் ஒன்று கூடி, கட்டிப்பிடித்து ஒப்பாரி வைத்தனர். மழை இல்லாததால், தாங்கள் படும் வேதனைகளை சொல்லி அழுதனர். இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறுகையில், கடும் வறட்சி ஏற்படும் காலத்தில், இது போன்ற ஒப்பாரி பூஜை நடத்துவது வழக்கம். பூஜையை தொடர்ந்து, மழை பொழியும் என்பது நீண்ட கால நம்பிக்கை என்றனர்.