பதிவு செய்த நாள்
21
மார்
2015
11:03
பரமக்குடி: பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில், ராமநவமி திருவிழா நேற்று காலை 10.15 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி யது. தொடர்ந்து தினமும் வாமன, காளிங்கநர்த்தன, பாண்டுரெங்கன், கூடலழகர், கள்ளழகர், தவழும் கண்ணன் உள்ளிட்ட அலங்காரத்தில் ராமர் பல்வேறு வாகனங்கில் வீதியுலா வருவார். மார்ச் 27 ல் மாலை 6 மணிக்கு புத்திரகாமேஷ்டி யாகம், மறுநாள் ராமஜனனம், மார்ச் 29 ல் காலை 11.15 மணிக்கு கோதண்டராமசாமிக்கும், சீதாதேவிக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. மறுநாள் தீர்த்தவாரியும், மார்ச் 31 ல் அனுமான் வீதியுலாவுடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை விழாக்குழுவினருடன், கோயில் தக்கார் இளையராஜா செய்து வருகின்றார்.