பதிவு செய்த நாள்
21
மார்
2015
12:03
கடலூர்: வண்டிப்பாளையம் சிவ சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வரும் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கடலூர், புதுவண்டிப்பாளையத்தில் உள்ள சிவ சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வரும் 3ம் தேதி நடக்கிறது. இதற்கான விழா வரும் 24ம் தேதி இரவு விநாயகர் பூஜை மற்றும் புற்று மண் எடுத்து, 25ம் தேதி காலை 5:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் வீதியுலா நடக்கிறது. 30ம் தேதி இரவு பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் முன்னிலையில் சிவ சுப்ரமணிய சுவாமிக்கு வள்ளி, தெய்வானையுடன் திருமண உற்சவமும், தொடர்ந்து சுவாமி வீதியுலாவும், ஏப்ரல் 2ம் தேதி காலை 5:00 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது. மறுநாள் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 3ம் தேதி காலை உத்திரபாத கோபுர தரிசனத்தை தொடர்ந்து 108 சங்கு பூஜை, மகா அபிஷேகம், பகல் 12:00 மணிக்கு யாகசாலை, கலச பூஜை அபிஷேகம் நடக்கிறது. மாலை சிறப்பு அபிஷேகம் மற்றம் தீபாராதனையும், இரவு கொடியிறக்கப்படுகிறது. 4ம் தேதி சண்டிகேஸ்வரர் வீதியுலாவும், 5ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.