உலகளந்த பெருமாள் கோவில் 27ம் தேதி பிரம்மோற்சவம் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2015 12:03
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி பிரம்மோற்சவ விழா துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவி லில் வரும் 27ம் தேதி பிரம்மோத்சவ விழா காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் ஜீயர் மடம் எழுந்தருளி மண்டகப்படி நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு சுவாமி அம்சவாகனத்தில் வீதியுலா நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5ம் நாள் 31ம் தேதி இரவு 9:00 மணிக்கு பெருமாள் கருடவாகனத்தில் வீதியுலா நடக்கிறது. அடுத்த மாதம் 2ம் தேதி மாலை திருக்கல்யாண வைபவம், இரவு 9:00 மணிக்கு முத்துப்பல்லக்கில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 4ம் தேதி காலை 7:00 மணிக்கு மேல் தேரோட்டம் துவங்குகிறது. மதியம் 2:30 மணிக்கு தேர் நிலையை அடைந்தவுடன் சுவாமி ஆஸ்தானம் எழுந்தருள்கிறார். தீர்த்தவாரி சாற்றுமுறை நடக்கிறது. ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடக்கும் விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.