பதிவு செய்த நாள்
23
மார்
2015
01:03
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோயிலில் தரிசனம் முடித்து நான்கு ரதவீதிகளில் வரும் பக்தர்கள், இயற்கை உபாதைகளுக்கு கழிப்பறை வசதி இன்றி அவதிப்படுகின்றனர். கோயிலில் பல்வேறு திருப்பணிகள் நடந்து வரும் நிலையில், பக்தர்கள் அடிப்படை வசதியை பூர்த்தி செய்ய கோயில் நிர்வாகம் தவறி விட்டதாக, மாநில இந்து அறநிலையத்துறை கமிஷனருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. இகுறித்து பா.ஜ., மாநில அறநிலைய பிரிவு செயலாளர் நாகேந்திரன் கூறியதாவது: ராமேஸ்வரம் வரும் பக்தர்களுக்கு கழிப்பறை, குடிநீர் வசதி வழங்குவதில் நகராட்சி நிர்வாகத்தை விட, கோயில் நிர்வாகத்திற்கு அதிக பொறுப்பு உள்ளது. ஆனால், கோயில் சார்ந்த நான்கு ரதவீதி, சன்னதி தெருவில் கழிப்பறை வசதியின்றி, பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். கோயிலுக்குள் உள்ள பல சன்னதியில் குருக்கள் இன்றி மூடி கிடப்பதால், பக்தர்கள் தரிசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். உடனே காலி பணியிடங்களை நிரப்பி, தடையின்றி பூஜை நடக்க, ஏற்பாடு செய்ய வேண்டும், என்றார்.