பழநி தங்கரத புறப்பாடு 5 நாட்கள் நிறுத்தம் ஏப்.,4ல் நடைஅடைப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2015 01:03
பழநி: பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு பழநி மலைக்கோயில் தங்கரதபுறப்பாடு 5 நாட்கள் நிறுத்தபட உள்ளது.பழநிமலைக்கோயிலில் தினமும் இரவு 7 மணிக்கு தங்கரதத்தில் சின்னக்குமாரசுவாமி புறப்பாடு நடக்கிறது. ரூ.2 ஆயிரம் காணிக்கையாக செலுத்தி ஏராளமான பக்தர்கள் தங்கரதம் இழுக்கின்றனர். வரும் மார்ச் 28 முதல் ஏப். 6வரை பங்குனிஉத்திரவிழா நடக்கிறது. இதற்கு ஏராளமான பக்தர்கள் வருவர். இதனால் ஏப்.1 முதல் ஏப்.5 வரை மலைக்கோயிலில் தங்கரதபுறப்பாடு கிடையாது, என பழநிகோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சந்திரகிரகணம்: பழநியில் ஏப்.,4ல்பவுர்ணமியை முன்னிட்டு மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படும். பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், வழக்கமாக மாலை 5.30 மணிக்கு நடக்கும் சாயரட்சை பூஜை சந்திரகிரகணத்தை முன்னிட்டு, பகல் 1.30 மணிக்கு நடக்கிறது. மாலை 3.45 மணிக்கு மேல் இரவு 7.15 மணி வரை மலைகோயில் சன்னதி திருக்காப்பிடப்படும். கிரகணம் முடிந்த பின் கோயிலை சுத்தம் செய்து சிறப்புபூஜைக்கு பின் சன்னதி திறக்கப் படும்.