பதிவு செய்த நாள்
23
மார்
2015
01:03
ஈரோடு : பண்ணாரி மாரியம்மன் கோவில், குண்டம் விழாவை முன்னிட்டு வரும், 7ம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. கல்லூரி, பள்ளிகளில் தேர்வுகள், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தால், இந்த விடுமுறை பொருந்தாது. தேர்வுகள் முன் கூட்டி அறிவித்தபடி நடக்கும்.இவ்விடுமுறையை ஈடுகட்டும் பொருட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஏப்., 25ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.உள்ளூர் விடுமுறை நாளில், அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும், என, கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.