பதிவு செய்த நாள்
23
மார்
2015
02:03
மணலி: விளையாட்டு மைதானத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில், போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது. மணலி மண்டலம், 18வது வார்டு, சி.பி.சி.எல்., நகரில், மாநகராட்சி சார்பில், 25 லட்சம் ரூபாய் செலவில் விளையாட்டு மைதானம் சீரமைப்பு பணி நடந்து வந்தது. கடந்த ஜன., ௧௫ல், மைதானத்திற்குள், சிலர் திடீரென கோவில் எழுப்பினர். அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி அதிகாரிகள் கோவிலை அகற்ற முற்பட்டனர். அதற்கு, பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அகற்ற முடியவில்லை. இந்த நிலையில், வேறு ஒரு இடத்தில் கோவில் கட்ட, இடம் தேர்வு செய்து தருவதாக, .பி.சி.எல்., நிறுவனம் சார்பாக, வாய்மொழியாக தெரிவிக்கப் பட்டது.இதையடுத்து, மைதானத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில், போலீஸ் பாதுகாப்புடன், அகற்றப்பட்டது.