காளையார்கோவில் : காளையார்கோவில் காளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் மே 29ம் தேதி நடைபெறள்ளது. சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட காளையார் கோவிலில் மூன்று சிவஆலயங்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் காளீஸ்வரர் தரை மட்டத்திலிருந்து 7அடிக்கு கீழ் சுயம்புலிங்கமாக தோன்றி அருள் பாலித்து வருகிறார். சோமேஸ்வரர் 12 அடி உயரத்தில் சந்திரன் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்ததால் ஸ்தாபக லிங்கமாகவும், வரகுணபாண்டியன் மன்னனுக்கு துயர் தீர்க்க காட்சி தந்ததால் காரணலிங்கமாகவும், இந்திரனால் உருவாக்கப்பட்ட 1008 சகஸ்திரலிங்கம் அமைந்து அருள் பாலித்து வருகிறார். இத்தலத்தில் மூன்று சிவ ஆலயங்கள் ஒரே இடத்தில் அமைந்திருப்பது தனி சிறப்பு. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் 2012 அக்டோபர் 18ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த பாலாலயம் செய்யப்பட்டது. திருப்பணி, பராமரிப்பு பணி நடந்து வருகிறது.வரும் மே29ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.