காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாணபெருமாள் கோவிலில் யுகாதி தெலுக்கு வருடப்பிறப்புயொட்டி ஊஞ்சல் சேவை நடந்தது. காரைக்கால் பாரதியார்சாலையில் உள்ள நித்யகல்யாணப்பெருமாள் கோவிலில் யுகாதி தெலுங்கு வருடப்பிறப்புயொட்டி நேற்று முன்தினம் இரண்டாம் ஆண்டாக நித்யகல்யாணப்பெருமாளுக்கு சிறப்பு அபிசோகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. அலங்காரத்தில் ஸ்ரீதேவி,பூதேவியுடன் நித்யகல்யாணப்பெருமாள் ஊஞ்சல் சேவேத்தில் பெருமாளுக்கு தீபரதனைகள் நடந்தது. நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தனி அதிகாரி ஆசைத்தம்பி மற்றும் மாவட்ட நாயுடுகள் நலச்சங்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.