திருவாரூர்: வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் நேற்று பாடைக்காவ டித்திருவிழா அதிவிமரிசையாக நடைபெற்றது. அறநிலையத்துறை அமைச்சர் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பாடைக்கட்டி மகா மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி திருவிழா அதி விமர்சியாக நடந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான விழாவில் நேற்று பாடைகட்டி விழா கோலாகலமாக நடந்தது. சுற்றுப்பகுதி மக்கள் மற்றுமு் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட ஆயிரக்கண க்கானவர்கள் பங்கேற்றனர்.மாலையில் செடில் சுற்றுதலும்,இரவு ராமநாடகமும்,அம்மன் வீதியுலாக்காட்சியும் நடந்தது.வரும் 29ம் தேதி ஞாயிறன்று புஷ்பப்பல்லக்கு விழாவும் ஏப்ரல் மாதம் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கடைஞாயிறு விழாவும் நடைபெறுகிறது. கோவில் நிர்வாகம் அடிப்டை வசதிகளை செய்யாததால் பக்கர் அவதி அடைந்தனர். மேலும் இடைத்தரகர்கள் ஆதிக்கம் தலை துாக்கியதால் வெளியூர் பக்தர்கள் மிகுந்த பாதிப்படைந்தனர்.